பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு கூடுதல் நிதி! அமைச்சரவை ஒப்புதல்

Dinamani2f2025 01 012f7sprnty62fimage001kn3y.jpg
Spread the love

புத்தாண்டின் முதல் நாளில் மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (ஜன. 1) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு கூடுதல் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றில் சில அம்சங்களைத் திருத்தவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டங்களுக்கு ரூ. 69,515.71 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

காப்பீட்டுத் திட்டங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ரூ. 824.77 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு நடந்த செய்தியாளர்களுடனான சந்திப்பில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் இதனை உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

”விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025 – ஆம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் விவசாயிகளின் வளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *