பரந்​தூர் விமான நிலை​யத்​தை எதிர்த்த ஏகனாபுரம் ஊராட்சி துணை தலைவர் திடீர் தற்கொலை: நடந்தது என்ன? | Ekanapuram panchayat deputy president commits suicide

1340336.jpg
Spread the love

காஞ்சிபுரம்: ஏக​னாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் திவ்யா (35) நேற்று முன்​தினம் தற்கொலை செய்து கொண்​டார். பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு எதிராக இவர் 9 முறை தீர்​மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்​பிட்​டத்​தக்​கது.

சென்னை​யின் 2-வது விமான நிலையம் காஞ்​சிபுரம் அருகே​உள்ள பரந்​தூரில் அமைகிறது. இதற்காக பரந்​தூர் மற்றும் சுற்றி​யுள்ள 13 கிராமங்​களில் இருந்து 5,000 ஏக்கர் நிலங்கள் கையகப்​படுத்​தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழு​மையாக கையகப்​படுத்​தப்பட உள்ளன. இதனால் இந்த கிராமத்தை மையமாகக் கொண்டு 2 ஆண்டு​களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்​டத்​தில் பங்கேற்று வந்தவர் கணபதி.

இவரது மனைவி திவ்​யா(35). ஏகனாபுரம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்த இவர், பரந்தூர் விமான நிலை​யத்​துக்கு எதிராக 9 முறை தீர்​மானம் நிறைவேற்ற உதவியாக இருந்​தவர். இந்நிலை​யில், நேற்று முன்​தினம் திவ்யா திடீரென தூக்​கிட்டு தற்கொலை செய்து கொண்​டார். பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணிகள் தீவிரப்​படுத்​தப்​படு​வ​தால் திவ்யா மன உளைச்​சலில் இருந்ததாக​வும், அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்​ட​தாக​வும் போராட்டக் குழு​வினர் தெரி​வித்​துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட திவ்​யா​வுக்கு இரு மகன்​கள், ஒரு மகள் உள்ளனர்.

திவ்யா குடும்ப பிரச்​சினை காரண​மாகவே தற்கொலை செய்துகொண்​டார் என்றும், விமான நிலைய திட்​டத்தை எதிர்த்து அவர் தற்கொலை செய்து கொள்ள​வில்லை என்றும், அதுபோல கடிதம் எதுவும் எழுதி வைக்க​வில்லை என்றும் போலீ​ஸார்தெரி​வித்​துள்ளனர். தற்​கொலை தொடர்பாக ​போலீ​ஸார் வழக்கு ப​திவு செய்து, ​விசாரணை நடத்தி வரு​கின்​றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *