பாசிப்பருப்பு பக்கோடா
தேவையானவை:
-
பாசிப்பருப்பு – ஒரு கப்
-
சின்ன வெங்காயம் – 150 கிராம்
-
நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டீஸ்பூன்
-
பச்சை மிளகாய் – 3 (நறுக்கவும்)
-
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
-
சோம்பு – கால் டீஸ்பூன்
-
காய்ந்த மிளகாய் – ஒன்று
-
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். பிறகு பாசிப் பருப்பு, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சோம்பு சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். மாவை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
பாசிப்பருப்பை அரைக்கும்போது முற்றிலுமாக தண்ணீரை வடித்தபின் அரைக்கவும். தண்ணீர் பதத்துடன் இருந்தால் எண்ணெய் அதிகமாக இழுக்கும்.
புரதச்சத்துடன் வைட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து ஆகியவையும் பாசிப்பருப்பில் நிரம்பியிருக்கின்றன.