தேவையானவை:
-
பாலக்கீரை – ஒரு கப்
-
வெங்காயம் – ஒன்று
-
கடலை மாவு – ஒரு கப்
-
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
-
பச்சை மிளகாய் – 4 (நறுக்கவும்)
-
நெய் – ஒரு டீஸ்பூன்
-
நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டீஸ்பூன்
-
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
பாலக்கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை சிப்ஸ் சீவும் பலகையில் மெலிதாக சீவிக்கொள்ளவும். நெய்யை உருக்கிக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பாலக் கீரை, வெங்காயம், உருக்கிய நெய் சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, அதில் பிசிறிய மாவை பக்கோடாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
பாலக்கீரையில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் பக்கோடாவுக்குத் தண்ணீர் தேவைப்படாது, பாலக்கீரையின் நீரே போதுமானது.