‘பரமக்குடி தபால் நிலையத்தை மூடக் கூடாது’ – மக்களவையில் நவாஸ்கனி வலியுறுத்தல் | Paramakudi Post Office should not be closed – Ramanathapuram MP Navaskani

1342146.jpg
Spread the love

புதுடெல்லி: பரமக்குடியில் அமைந்துள்ள ஆர்.எம்.எஸ் தபால் நிலையத்தை மூடக் கூடாது என்று மக்களவையில் ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி வலியுறுத்தி உள்ளார்.

நாடாளுமன்றத்தில், புதன்கிழமையன்று நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், “பரமக்குடி, என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது. இங்கு அஞ்சல் பிரிப்பக அலுவலகம் (ஆர்.எம்.எஸ்.) கடந்த 1984-ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது வரையில், இங்கு தினந்தோறும் 2500 முதல் 3500 விரைவுத் தபால் மற்றும் பதிவுத் தபால்களை கையாண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. பரமக்குடி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு அருகாமையில் இந்த ஆர்.எம்.எஸ். அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் தபால் பைகளை வாங்குவதற்கும் பிரித்து அனுப்புவதற்கும் வசதியாக இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

மாலை தொடங்கி அதிகாலை வரையில் பதிவுத் தபால் உள்ளிட்ட விரைவுத் தபால்கள், சாதாரண தபால்கள் வரை இங்கு அனுப்புவதற்கான வசதிகள் உள்ளது. இதனால், அலுவலகங்களில் பணிபுரியும் பலர் தங்களது வேலை நேரம் முடிந்த பின்னர், மாலை நேரங்களில் வந்து தபால் அனுப்பும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, இதனை கருத்தில் கொண்டு பரமக்குடியின் ஆர்.எம்.எஸ். அலுவலகத்தை தொடர்ந்து இயங்குவதற்கான வழிகளை செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *