‘பராசக்தி’ படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்திருக்கிறார்.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாக இருந்தது.
அதேசமயத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திக்கேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா நடித்த ‘பராசக்தி’ திரைப்படமும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ‘பராசக்தி’ படம் திரையரங்கில் வெளியாகிவிட்டது. ஆனால் ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் சர்ச்சையால் வெளியாகவில்லை.
இந்நிலையில் தான் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா’ பதிப்பக்கத்திற்கு பேட்டி அளித்த சுதா கொங்கரா, ” ஒரு படத்திற்கு எதிராக தெரியாத ஐடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகிறார்கள்.
அது எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வகையான தாக்குதல்கள் அரசியல் சார்ந்தவை அல்ல. இது, படம் வெளியிடப்படாத (பொங்கலுக்கு) நடிகரின் ரசிகர்களிடமிருந்து வருகிறது. இந்த ரவுடித்தனம் மற்றும் குண்டர் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் போராட வேண்டியிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.