சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “பராசக்தி’.
ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘பராசக்தி’ படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கமல்
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” அன்புள்ள இளவல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு… தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்.