பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!

Dinamani2f2025 02 232fwa277c8n2findian Railway.jpg
Spread the love

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல இடங்களில் ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கேரள ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஆலப்புழையில் இருந்து மாா்ச் 10, 12, 15 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழை – தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயிலானது கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.

இதேபோல, எா்ணாகுளத்தில் இருந்து மாா்ச் 10,12, 15 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *