சென்னை: பழுது நீக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் வேளச்சேரி இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடை இன்றுமுதல் 25-ம் தேதி வரை 20 நாட்களுக்கு இயங்காது.
இது குறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-172-க்குட்பட்ட வேளச்சேரி இந்து மயானபூமியின் எரிவாயு தகனமேடையில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், பிப். 5 முதல் 25-ம் தேதி வரை 20 நாட்கள் மேற்கண்ட மயானபூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது.
எனவே, இந்த நாட்களில், பொதுமக்கள் ஆலந்தூர் மண்டலம், வார்டு-163-க்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மற்றும் அடையாறு மண்டலம், வார்டு-178-க்குட்பட்ட வேளச்சேரி பாரதி நகர் மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.