அதனால் வாட்ஸ்ஆப் குழுக்கள், இ-மெயிலில் வரும் அதுபோன்ற லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் இணையவழி குற்றப்பிரிவு காவல்துறை ஒரு முக்கிய எச்சரிக்கையை வழங்கியுள்ளது.
போக்குவரத்துத் துறையின் ‘பரிவாஹன்’ செயலி பெயரில் வரும் போலி லிங்க்குகள், ஏபிகே கோப்புக்ளை திறக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறது.
பரிவாஹன் என்ற பெயரில் போலி லிங்குடன் ஏபிகே(APK) கோப்புகள் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படுகின்றன. பரிவாஹன் செயலியை இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்துகிறது. ஆனால் இது போலியான லிங்க் ஆகும். இதுபோன்ற லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். உங்கள் தரவுகள்/பணம் திருடப்படலாம்.
அதேபோல சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ‘நீங்கள் இவ்வளவு தொகை கட்ட வேண்டும், இவ்வளவு தொகை நிலுவையில் உள்ளது’ என்றும் செய்திகள் அனுப்பப்படுகின்றன. அவற்றையும் கிளிக் செய்ய வேண்டாம். அந்த எண்ணை உடனடியாக பிளாக் செய்யவும். போக்குவரத்து காவல்துறை அப்படியான விவரங்களை அனுப்பாது என்று சைபர் காவல்துறை கூறியுள்ளது.
அப்படி கிளிக் செய்யும்பட்சத்தில் உங்களின் மொபைலில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு பணம் பறிக்கப்படலாம்.