இதுபற்றி, உள் துறை செயலாளர் கௌரவ் தயாள் வெளியிட்டுள்ள உத்தரவில், முகப்புத்தகம், யூடியூப், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகச் செயலிகள் மூலம் வதந்திகள் பரவி மதக்கலவரங்கள் உருவாகக் கூடும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பரேலி பிரிவில் உள்ள மாவட்டங்களின் முக்கிய பகுதிகள் மற்றும் தெருக்கள் முழுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு; பாதுகாப்புப் படையினர் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, செப். 26 ஆம் தேதி கொட்வாலி பகுதியில் உள்ள மசூதியின் அருகில் திரண்ட இஸ்லாமியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு