பறவை காய்ச்சல் அறிகுறிகள் என்ன ? பாதுகாத்து கொள்வது எப்படி – Kumudam

Spread the love

H5N1 வைரஸ் தொற்று தான் பறவைக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது மனிதர்களை நேரடியாக பாதிப்பதில்லை, பறவைகள், கோழி, விலங்குகள் வழியாக  மனிதர்களுக்கு பாதிக்கலாம். 

இந்த காய்ச்சல் வந்தால் மேல் சுவாசக்குழாய் மற்றும் நுரையீரல்களைப் பாதிக்கலாம். தீவிர நிலையில் மூளை மற்றும் உடலின் மற்ற உறுப்புகளையும் இது பாதிக்கலாம். 

பறவைக்காய்ச்சல் வந்தால் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

கடுமையான காய்ச்சல்

இருமல்

தொண்டைபுண்

உடல் சோர்வு

தசை வலி

கண் தொற்று

மூக்கு அடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்

குமட்டல்

வாந்தி 

வயிற்றுப்போக்கு 

தொற்று தீவிரமாக இருந்தால்  குறிப்பாக 60 வயது கடந்தவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு நிமோனியா, சுவாசிப்பதில் சிரமம், உறுப்பு செயலிழப்பு உண்டாகலாம். இந்த அறிகுறிகள் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்

தடுப்பு நடவடிக்கை

இறந்த பறவைகளுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

வீட்டைச் சுற்றி பறவைகள் அசாதாரணமாக இறந்துகிடந்தால் கால்நடை பராமரிப்பு துறைகளுக்கு தெரிவிக்கவும். 

இறைச்சி சாப்பிடுபவர்கள் சமைக்கும் முன்பு இறைச்சியை மஞ்சள் போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். முழுமையாக சமைத்து சாப்பிட வேண்டும்.

அறிகுறி கண்டவுடன் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்ய வேண்டும்.

வெளி இடங்களில் இருந்து வந்த உடன் கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்வதை மறக்க வேண்டாம். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *