Doctor Vikatan: பலரும் காபி, டீ உள்பட எதிலும் சர்க்கரை சேர்த்துக்கொள்வதில்லை என்றும் “நோ சுகர்’ டயட்டுக்கு மாறிவிட்டதாகவும் சொல்கிறார்கள். நானும் அதைப் பின்பற்றலாம் என கடந்த ஒரு வாரமாக எதிலுமே சர்க்கரை சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், எனக்கு ஒரு வாரமாக மன அழுத்தமும் எரிச்சலும் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். தவிர, கை, கால்களில் ஒருவித நடுக்கத்தையும் உணர்கிறேன். சர்க்கரையை நிறுத்தியதுதான் இதற்கெல்லாம் காரணமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

“No-Sugar Diet எனப்படும் இனிப்பை முற்றிலும் தவிர்க்கும் உணவுமுறையில் நாம் சர்க்கரையை மட்டுமே தவிர்க்கிறோம். மற்றபடி உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துகள் (கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் போன்றவை) மற்ற உணவுகளின் மூலம் உடலுக்குக் கிடைத்துக் கொண்டேதான் இருக்கும்.