பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Dinamani2fimport2f20202f122f62foriginal2ffire Gujarat.jpg
Spread the love

ஹுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலில் சிலிண்டர் வெடிப்பில் படுகாயமடைந்த ஐயப்ப பக்தர்களில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த டிச.23 அன்று சாய் நகர் பகுதியிலுள்ள சிவன் கோயிலில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அங்கு உறங்கிக்கொண்டிருந்த 9 ஐயப்ப பக்தர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.

பின்னர் கர்நாடக அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர்கள் 9 பேரில் நேற்று (டிச.28) இரவு ஒருவர் பலியானதுடன், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், இன்று (டிச.29) காலை மஞ்சுநாத் வாக்மோர் (வயது-22) என்பவர் சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளார். இதனால், அந்த சிலிண்டர் விபத்தில் பலியான ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: ஜம்மு – காஷ்மீரில் கொல்லப்பட்ட 60% பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களே! இந்திய ராணுவம் தகவல்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *