தாம்பரத்திலிருந்து புதன்கிழமை காலை சென்னை கடற்கரை நோக்கி வந்துகொண்டிருந்த மின்சார ரயிலின் 6-ஆவது பெட்டியில் புகை வந்ததால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து கடற்கரை நோக்கி வந்த மற்றோரு மின்சார ரயிலும் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. நல்வாய்ப்பாக இதை முன்கூட்டியே கவனித்த ரயில்வே அதிகாரிகள் ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தைத் தொடா்ந்து அந்த ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் ஒரே நேரத்தில் வந்து நின்ால், ரயில் நிலையத்தில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது.
பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் நின்ற 2 மின்சார ரயில்கள்
