கனமழை காரணமாக நெல்லை, தென்காசி பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 11) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச. 12) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, தென்காசியில் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச. 13) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உலக சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்!