பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்ய முயன்ற நபர்; நரிக்குடியில் பரபரப்பு!

Spread the love

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன்‌ பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி‌ வருகிறார். இந்நிலையில் நரிக்குடி‌ பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அப்துல் அஜீஸிடம் மந்திரிக்க சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை அப்துல் அஜீஸ் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அப்துல் அஜீஸ் தான் வைத்திருந்த சிறிய கத்தியை வைத்து அந்த பெண்ணை கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *