ஒடிசா மாநிலம் கெந்தரப்பரா மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
கெந்தரப்பரா மாவட்டத்தின் ஃபகிராபாத் எனும் கிராமத்திலுள்ள ராமசந்திரா நோடல் உயர்நிலை அரசுப் பள்ளியின் திடலில் நேற்று ஆண்டு விழா நடைப்பெற்றது. அப்போது அருகிலிருந்த மரத்திலிருந்து தேனீக்கூடு ஒன்று கிழே விழுந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அதிலிருந்த தேனீக்கள் கூட்டமாக அருகில் நடைப்பெற்று கொண்டிருந்த பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை விரட்டி கொட்டத் துவங்கின.
இதில், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் தப்பித்து ஒடி வகுப்பறைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இருப்பினும், தேனீக்கள் அவர்களை விரட்டிச் சென்று மாணவர்களை பல இடங்களில் கொட்டியுள்ளது.