பள்ளி நிகழ்ச்சியில் 30 பேர் பலி!

Dinamani2f2024 12 192fkto6qfu82ftnieimport2023716originaldeath.avif.avif
Spread the love

நைஜீரியா நாட்டில் பள்ளி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.

நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் இயங்கி வந்த பள்ளிக்கூடத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு நிறைவையும் கொண்டாடும் விதமாக, புதன்கிழமை (டிச. 18) கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

கலை நிகழ்ச்சிகளைக் காணவும், பரிசுப் பொருள்களை வாங்கவும் குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடினர். இந்த நிலையில், கூட்டத்தினரிடையே எதிர்பாராத விதமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 30 பேர் பரிதாபமாக பலியாகினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *