பள்ளி போனதே ஒரு வெற்றி – பழைய நினைவுகள் | My Vikatan author shares about old school

Spread the love

மறுநாள் சிறுவன் சிக்கிரமே குளியல் செய்து சீருடை அணிந்துக்கொண்டான், பின்பு அவன் அம்மா தேங்காய் எண்ணெய்யை  தலையில் தேய்த்து தலைவாரி மகனை அழகு படுத்தினாள்! பின்பு  அவனது அப்பா பேக், சாக்லேட், ஒரு மரக்கா நெல் எடுத்துக்கொண்டு அவனை கூட்டிக்கொண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்றார்! அப்பள்ளி ஆசிரியருக்கு  காலை வணக்கம் சொன்னார்கள், ஆசிரியர் அவர்களை வரவேற்றார்!

அப்பா ஆசிரியரிடம் மகனை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றார், அங்குள்ள மாணவர்கள் நகைத்தனர்!

அப்போது ஆசிரியர் அச்சிறுவனை அழைத்து அவனது வலதுகை எடுத்து தலை மேல் வழியாக இடது காதை தொட சொன்னார், சிறுவன் அதை செவ்வனே செய்து முடித்தான், ஆசிரியரும் அங்குள்ள மாணவர்களும் அவனது முயற்சியை பாராட்டினார்கள்!

பின்பு ஆசிரியர் அச்சிறுவனை அழைத்து மூன்று மத கடவுள் முன்னாடி அமர வைத்து எம்மதமும் சம்மதம் எனக் கூறி நெல் தானியத்தை தரையில் வைத்து தமிழ் உயிரெழுத்துக்களை சிறுவன் வலதுகை பிடித்து வாய் மொழியாகக் கூறி எழுத வைத்தார், சிறுவனுக்கு உணர்வு பூர்வமாக இருந்தது!

சிறுவன் சாக்லேட் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி தன்னை அறிமுகபடுத்திக் கொண்டான், ஆசிரியர் கொடுத்த புத்தகத்தை  மகிழ்ச்சியுடன் பெற்று மாணவர்களுடன் அமர்ந்தான்.

இதைப் பார்த்த அச்சிறுவன் தந்தை மகிழ்ச்சியாக வேலைக்கு சென்றார்! ஆசிரியர் மாணவர்களிடம் புத்தக்கத்தின் முதல் பக்கத்தை  திறக்கச் சொன்னார்! அதில் “தீண்டாமை” பற்றிய புரிதலை விளக்கினார். 

அனைத்து மாணவர்களும் முதல் நாள் வகுப்பில் “சாதி மத தீண்டாமை” அறிந்து பள்ளி வந்தத் தற்கான வெற்றியை கண்டனர். 

வெற்றி கதை தொடரும்!!! 

இப்படிக்கு 

ஆ.வினோத்குமார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *