பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர் | Akal vilakku Scheme for School Girls

1372540
Spread the love

புதுக்கோட்டை: சமூக வலை​தளங்​கள் மற்​றும் சைபர் குற்​றங்​களில் இருந்து மாணவி​கள் தங்​களைப் பாது​காத்​துக் கொள்​வதற்​காக ‘அகல் விளக்​கு’ என்ற தமிழக அரசின் புதிய திட்​டம் நேற்று தொடங்​கப்​பட்​டது.

இத்​திட்​டத்​தை, புதுக்​கோட்டை மாவட்​டம் கீரமங்​கலம் அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் அமைச்சர்கள் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, எஸ்​.ரகுப​தி, சிவ.வீ.மெய்​ய​நாதன் ஆகியோர் தொடங்​கி​வைத்​தனர்.

விழா​வில், அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி பேசி​ய​தாவது: செல்​போன் அனை​வரை​யும் ஆக்​கிரமித்​து, அடிமை​யாக்கி உள்​ளது. பெண் குழந்​தைகள் கவன​மாக இருக்க வேண்​டிய காலம் இது. தனி அறையைத் தவிர, அனைத்து இடங்​களும் கண்​காணிக்​கப்​படு​கின்​றன. அன்​பாக பேசி​னால் மயங்​கி​விடக்​கூ​டாது. சமூக வலை​தளங்​களில் சிக்​கிக் கொண்​டாலும் கவலைப்​படத் தேவை​யில்​லை. அதிலிருந்து மீண்டு வர முடி​யும். கவனச் சிதறல் ஏற்​ப​டா​மல் இருக்க புத்​தகம் வாசிக்க வேண்​டும்.

பிள்​ளை​களின் நடவடிக்​கைகளை பெற்​றோர் கண்​காணிக்க வேண்​டும். இதே​போல, ஆசிரியர்​களும் மாணவி​களைக் கண்​காணித்​து, தேவை​யான ஆலோ​சனை வழங்க வேண்​டும் என்​றார். ஆட்​சி​யர் எம்​.அருணா தலை​மை​யில் நடை​பெற்ற இந்த விழா​வில், ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்வி திட்ட இயக்​குநர் மா.ஆர்த்​தி,இணை இயக்​குநர் வை.கு​மார், மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர் கூ.சண்​முகம் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *