பழநி பஞ்சாமிர்தத்துக்கான நெய் ஆவினில் இருந்தே பெறப்படுகிறது: அறநிலையத் துறை விளக்கம் | ghee for Palani Panchamirtha is obtained from Aavin itself

1314470.jpg
Spread the love

சென்னை: பழநி பஞ்சாமிர்தத்துக்கு ஆவின் நிறுவனத்திடம்இருந்தே நெய் பெறப்படுவதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம்தான் பழநி பஞ்சாமிர்தத்துக்கும் நெய் வழங்கி வருவதாக சமூக ஊடகங்களில் நேற்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், இவ்வாறு வெளியாகியுள்ள தகவல் வதந்தி என்று தமிழக அரசின் உண்மை கண்டறியும் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது: திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய நிறுவனம், பழநி முருகன் கோயிலுக்கும் நெய் விநியோகம் செய்வதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது. பழநி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நெய், ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று தமிழக இந்து சமய அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *