பழநி முருகன் கோயில் நிதி மூலம் திருமண மண்டபம் கட்டுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்: ஐகோர்ட் மதுரை அமர்வு | Madurai High Court bench orders Palani Murugan Temple Marriage hall issue

1372880
Spread the love

மதுரை: பழநி முரு​கன் கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டும் விவகாரத்​தில், தற்​போதைய நிலையே தொடர வேண்​டும் என்று உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை எழு​மலை​யைச் சேர்ந்தராம ரவிக்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: பழநி தண்​டா​யுதபாணி சுவாமி கோயிலுக்​குச் சொந்​த​மான நிதி​யில் இருந்து ரூ.4.54 கோடி மதிப்​பில், உத்​தமபாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்ளது. இது அறநிலை​யத் துறை விதி​களுக்கு எதி​ரானது. கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்டக் கூடாது.

ரூ.400 கோடி நிதி… உத்​தம​பாளை​யம் திருக்​காளாத்​தீஸ்​வரர் மற்​றும் நரசிங்​க பெரு​மாள் கோயில் பெயரில் உத்​தேச​மாக ரூ.400 கோடி நிதி உள்​ளது. இதனால் இக்​கோ​யில் வறுமை நிலை​யில் இருக்​கும் கோயி​லாக கருத முடியாது. தற்​போது கோயில் சார்பு இல்​லாமல் மண்​டபம், கல்லூரி, மருத்​துவமனை, கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

இதை ஏற்க முடி​யாது. எனவே பழநி கோயில் நிதி​யில் திருமண மண்​டபம் கட்​டு​வது தொடர்​பாக பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையைசட்ட விரோதம் என அறி​வித்​து, திருமண மண்​டபம் கட்ட தடை விதித்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள் முரு​கன் அமர்​வில் விசா​ரிக்​கப்​பட்​டது. பின்​னர் நீதிப​தி​கள், “பழநி கோயில்நிதி​யில் உத்​தம​பாளை​யத்​தில் திருமண மண்​டபம் கட்​டு​வது தொடர்​பான விவ​காரத்​தில் தற்​போதைய நிலையே தொடர வேண்​டும். மனு தொடர்​பாக பழநி கோயில் செயல் அலு​வலர் மனு தாக்​கல்​ செய்​ய வேண்​டும்​. வி​சா​ரணை வரும்​ 19-ம்​ தேதிக்​கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *