பழனிசாமி பேச்சில் உள்நோக்கம் எதுவுமில்லை: நயினார் நாகேந்திரன் கருத்து | Nainar Nagendran says there is no ulterior motive in Palaniswami speech

1370157
Spread the love

நாகப்பட்டினம்: ஆட்​சி​யில் பங்கு கொடுக்க நாங்​கள் ஏமாளி​கள் அல்ல என்று பழனி​சாமி பேசி​ய​தில், எந்த உள்​நோக்​க​மும் இல்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். நாகை மாவட்​டம் உத்​தம சோழபுரத்​தில் வெட்​டாற்​றின் குறுக்கே கட்​டப்​படும் தடுப்​பணைபணியை நிறுத்​தி​விட்​டு, ஏற்​கெனவே அறி​வித்த பூதங்​குடி பகு​தி​யில் தடுப்​பணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்​பில் வாஞ்​சூரில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கி​வைத்​துப் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் விவ​சா​யிகள் அதி​கம் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். பூதங்​குடி​யில் கட்​ட​வேண்​டிய தடுப்​பணையை உத்​தமசோழபுரத்​தில் கட்​டு​வ​தால் மக்​களுக்கு எந்​தப் பயனும் இல்​லை.

2026-ல் ஆட்சி மாற்​றம் ஏற்​படும். அப்​போது பூதங்​குடி​யிலேயே தடுப்​பணை கட்​டப்​படும். மத்​திய அரசால் விவ​சா​யிகளுக்கு ஒதுக்​கப்​படும் நிதியை தமிழக அரசு முறை​யாகப் பயன்​படுத்​து​வ​தில்​லை. இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஆர்ப்​பாட்​டத்​துக்கு பின்​னர் செய்​தி​யாளர்​களுக்கு நயி​னார் நாகேந்​திரன் பேட்டி அளித்​த​போது, ஆட்​சி​யில் பங்கு கொடுக்க நாங்​கள் ஏமாளி​கள் அல்ல என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி​யது குறித்து செய்​தி​யாளர்​கள் கேட்டனர். அதற்கு “அதி​முகவை பாஜக​விடம் அடகு வைத்​து​விட்​டார்​கள், பாஜக​வினர் அதி​முகவை கபளீகரம் செய்​து​விடு​வார்​கள் என திமுக​வினர் கூறியதற்​கு​தான், எதிர்க்​கட்​சித் தலை​வர் அவ்​வாறு பதில் அளித்​துள்​ளார்.

அதில் எந்​த​ வித உள்​நோக்​க​மும் இல்​லை. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆட்சி தமிழகத்​தில் அமை​யும். எந்​தக் கட்​சி​யின் ஆட்சி அமை​யும் என்​பதை அப்​போது அறிந்​து​கொள்​ளலாம். 2026 தேர்​தலில் பாஜக​வுக்கு எத்​தனை இடங்​கள் கிடைக்​கும் என்​பது குறித்து ஊடகங்​கள் கவலைப்பட வேண்​டாம்” என்​றார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *