பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

dinamani2F2024 072Fc24d7005 5aad 49fe 8819 e70af2e7479d2FP 3684302855
Spread the love

பழனியில் முருகன் கோயிலில் நாளை(ஆக. 20) முதல் மீண்டும் ரோப் கார் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரயில், கம்பிவட ஊர்தி(ரோப் கார்) ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

2 நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சியை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்திக்கு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது.

இந்த ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப் கார் சேவை நிறுத்தப்படும்.

இந்த நிலையில், பழனி முருகன் கோயிலில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக, ஜூலை 15 ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை, நாளை(ஆக. 20) முதல் மீண்டும் பயன்பாட்டு கொண்டுவரப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 35 நாள்களுக்குப் பிறகு நாளை காலை 9 மணிக்கு ரோப் கார் சேவை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆளில்லா ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்தால் ஓட்டுநர் நோயாளியாவார் – இபிஎஸ் எச்சரிக்கை

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *