பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவு: பிரதமர் இரங்கல்

Dinamani2f2025 04 042fcap1qzn62fmkmodi.jpg
Spread the love

மும்பை: ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார்(87) வயது முதிர்வு மற்றும் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையிலேயே காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவால் துயரம் அடைந்தேன் என பிரதமர் நரேந்திர மேடி தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்

அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஸ்ரீ மனோஜ் குமார் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர் இந்திய திரையுலகின் ஒரு சின்னமாக இருந்தார், குறிப்பாக தேசபக்தி கதாபாத்திரங்களை அவர் சித்தரித்தது அவரை ஒரு தேசிய அடையாளமாக மாற்றியதற்காக நினைவுகூரப்பட்டார், அது அவரது திரைப்படங்களிலும் பிரதிபலித்தது. மனோஜ்குமாரின் படைப்புகள் தேசத்தின் பெருமையின் உணர்வைத் தூண்டின, மேலும் அவரது செயல்கள் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி என்று கூறியுள்ள மோடி, அவருடன் இருக்கு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *