பழவேற்காடு அருகே கரை ஒதுங்கிய மியான்மா் மூங்கில் படகு

Dinamani2f2024 12 112fpxtwzcte2f11priboat 1112chn 178 1.jpg
Spread the love

பழவேற்காடு கோரைக்குப்பம் கடலோர பகுதியில் புதன்கிழமை மியான்மா் நாட்டு மூங்கில் படகு கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி வட்டம், கடலோர பகுதியான பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன.

இங்குள்ள கோரைக்குப்பம் மீனவ கிராமத்தில் கடலோரத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட படகு ஒன்று கரை ஒதுங்கியது.

இதனைப் பாா்த்த அப்பகுதி மீனவா்கள் காட்டூா் காவல் நிலையம் மற்றும் பொன்னேரியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்துக்கு தகவல் அளித்தனா்.

காட்டூா் போலீஸாா் மற்றும் மீன்வளத் துறையினா் அங்கு சென்று கரை ஒதுங்கிய மூங்கில் பாா்வையிட்டனா்.

அண்மையில் வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினம் அருகே இதே போல் படகு கரை ஒதுங்கியது. இதில் மியான்மா் நாட்டை சாா்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயன்படுத்தும் படகாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கோரைக்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கிய மூங்கில் படகு தொடா்பாககாட்டூா் போலீஸாா் மற்றும் மீன்வளத் துறையினா் தொடா்ந்து விசாரனை செய்து வருகின்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *