5. Digital Decluttering (மின்னணு மற்றும் டிஜிட்டல் தூய்மை)
E-Waste: உடைந்த செல்போன்கள், வேலை செய்யாத சார்ஜர்கள் மற்றும் பயன்படாத ஒயர்களை (Cables) முறையாக அப்புறப்படுத்துங்கள்.
Digital Files: உங்கள் அலைபேசியில் உள்ள தேவையற்ற புகைப்படங்கள், செயலிகள் மற்றும் மின்னஞ்சல்களை (Unwanted Emails) நீக்குங்கள். இது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
6. Home Office & Stationery (வீட்டு அலுவலகம் மற்றும் எழுதுபொருட்கள்)
Paperwork: தேவையற்ற பழைய ரசீதுகள் (Receipts), வங்கி அறிக்கைகள் மற்றும் காலாவதியான இன்சூரன்ஸ் பேப்பர்களை அகற்றிவிட்டு, முக்கியமான ஆவணங்களை மட்டும் File செய்யுங்கள்.
Desk Essentials: எழுதாத பேனாக்கள், காய்ந்துபோன இங்க் பாட்டில்கள் மற்றும் பழைய டைரிகளை மேசையிலிருந்து அகற்றுங்கள்.
Planning: புதிய ஆண்டிற்கான New Planner மற்றும் நாட்காட்டிகளைத் தயார் செய்து, உங்கள் மேசையை நேர்த்தியாக (Organizedவையுங்கள்.
டிசம்பர் மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய பகுதியைச் சுத்தப்படுத்துங்கள். தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவது என்பது உங்கள் வாழ்வின் புதிய தொடக்கத்திற்கான இடம் ஒதுக்குவதாகும்.
Simplify your home, simplify your life.