பஹல்காமில் பாதிக்கப்பட்ட மருத்துவரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

Dinamani2f2025 04 242fhk5uvgru2fmk Stalin.jpg
Spread the love

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பாதிக்கப்பட்ட மருத்துவர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மருத்துவர் பரமேஸ்வரனின் மனைவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். பரமேஸ்வரன் மனைவியிடம் விசாரித்து தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *