பஹல்காம் தாக்குதலில் பலியான என். ராமச்சந்திரனின் குடும்பத்தினரை கொச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார்.
பாஜக வட்டாரத் தகவலின்படி, வெள்ளிக்கிழமை பாஜக மாநிலத் தலைமைக் கூட்டம் நடைபெற்ற ஹோட்டலில் ராமச்சந்திரனின் மனைவி ஷீலா மற்றும் மகள் ஆரதி ஆர். மேனனை அமித் ஷா நேரில் சந்தித்தார்.
பாஜகவின் கூட்டம் தொடங்குவதற்கு முன் இந்த சந்திப்பு நடைபெற்றது என கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.