பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுமார் 24,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பருமழை தொடங்கியது முதல், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் தொடர் வெள்ளம் ஏற்பட்டு வருகின்றது. இதனால், தற்போது வரை நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், மழை பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
பஞ்சாப் மாகாணத்தில், அடுத்த 48 மணிநேரத்தில் கனமழையானது மேலும் தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டமானது அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சிந்து, செனாப், ரவி மற்றும் சட்லூஜ் ஆகிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.