பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

Dinamani2fimport2f20232f112f232foriginal2frajouri Encounter.jpg
Spread the love

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்களது பதுங்குமிடங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன்; மிகப் பெரியளவிலான ஆயுதங்களின் குவியல்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதலில் பலியான தீவிரவாதிகள் 4 பேரும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வேறு தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஒட்டுமொத்த நாடும் தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *