இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரேனுகா சிங், பூஜா வஸ்த்ரகார் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். இந்திய அணி 85 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டினை இழந்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.