பாகிஸ்தான்: மலைப்பகுதியில் அதிவேகப் பயணம்! வேன் கவிழ்ந்து 16 பேர் பலி!

Dinamani2f2025 04 222fc2dou5492ftnieimport2021311originalindonesiaap.avif.avif
Spread the love

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.

சிந்து மாகாணத்தின் பதின் எனும் பகுதியை நோக்கி பஞ்சாப் மாகாணத்தின் லபாரியைச் சேர்ந்த கொல்ஹி எனும் பழங்குடியின மக்கள் நேற்று (ஏப்.21) ஒரு வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 16 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். மேலும், இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அந்நாட்டு அதிகாரிகள் படுகாயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் பலரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாகவும் இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

முன்னதாக, இந்த விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் பலூசிஸ்தான் மாகாணத்தில் நெல் அறுவடைப் பணிக்காகச் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானின் பெரும்பாலான சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததினால் அந்நாட்டில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை. வழக்கு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *