பாகிஸ்தான் vs நெதர்லாந்து – உலகக் கோப்பை தொடக்க ஆட்டமே பரபரப்பு

Spread the love

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியே ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டது.

கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

தொடர்ந்து முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் வேகமும் துல்லியமும் நிறைந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இருப்பினும், மைக்கேல் லெவிட் (24), பாஸ் டி லீடே (30), கோலின் அக்கர்மேன் (20) மற்றும் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (37) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை ஓரளவு மீட்டெடுத்தனர். 19.5 ஓவர்கள் முடிவில், நெதர்லாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் vs  நெதர்லாந்த்

பாகிஸ்தான் vs நெதர்லாந்த்
ICC

148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆரம்பத்தில் பர்ஹான் – அயூப் ஜோடியுடன் அதிரடியாக தொடங்கியது. ஆனால், நெதர்லாந்து பந்து வீச்சாளர்கள் சரியான நேரத்தில் விக்கெட்களை கைப்பற்றி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். தொடர்ந்து விக்கெட்கள் விழ, பாகிஸ்தான் அணி உறுதியான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் தடுமாறியது.

18 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், 12 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட என்ற நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் வசம் 3 விக்கெட்டுகளே மீதம் இருந்ததால், ஆட்டம் அப்போது நெதர்லாந்து பக்கம் தான் இருந்தது.

ஆனால் அப்போது பந்து வீச வந்த லோகன் வான் பீக் ஓவரில் பாகிஸ்தான் வீரர் பஹீம் அஷ்ரஃப் 24 ரன்களை பறக்கவிட்டு போட்டியை பாகிஸ்தானின் பக்கம் திருப்பினார். கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி அமைதியாக இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி வரை போராடிய நெதர்லாந்து அணி தோல்வியடைந்தாலும், அவர்களின் போராட்ட ஆட்டம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. தொடக்க நாளிலேயே இப்படியொரு பரபரப்பான போட்டியுடன், இந்த T20 உலகக் கோப்பை தொடர் தொடங்கியுள்ளது.

தற்போது வெஸ்ட் இன்டீஸ் – ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இன்று இரவு நடக்கும் மூன்றாவது போட்டியில் இந்தியா அமெரிக்கா அணிகள் மோதவுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *