பாக்கெட் நாவல்: மீண்டும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி!

Spread the love

‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்’ (Tyler Durden and Kino Fist) பேனரின் கீழ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாக்கெட் நாவல் எனப் பெயரிட்டிருக்கிறார்.

பாக்கெட் நாவல்
பாக்கெட் நாவல்

இந்தப் படத்தில், ‘சூப்பர் டீலக்ஸ்’ குழுவில் பணியாற்றிய தயாரிப்பாளர் எஸ்.டி. எழில்மதி, எடிட்டர் சத்யராஜ் நடராஜன் ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, பாக்கெட் நாவல் படத்திலும் இணைந்திருக்கிறார். இவருடன் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *