பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா வலுவான தொடக்கம்!

Dinamani2f2024 12 262f0p9vy9f92fap12262024000008b.jpg
Spread the love

பாா்டா் – காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ரன்கள் சேர்த்து வருகின்றனர்.

மெல்போா்ன் நகரில் இன்று அதிகாலை(இந்திய நேரப்படி) தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகின்றது.

உணவு இடைவெளி முடிந்து ஆட்டம் தொடர்ந்து வரும் நிலையில், 37 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 137 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.

தொடக்க வீரர் சாம் கான்ஸ்டாஸ் 60 ரன்களுக்கு ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கவாஜா 51 ரன்களுடனும், மார்னஸ் லாபுசாக்னே 22 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணியில் ஷுப்மன் கில்லுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க : டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான திட்டமிடலில் தென்னாப்பிரிக்கா..!

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதலில் நடைபெற்ற பொ்த் டெஸ்ட்டில் இந்தியாவும், 2-ஆவதாக அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் பந்து டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. பிரிஸ்பேனில் இந்த அணிகள் மோதிய 3-ஆவது டெஸ்ட் டிரா ஆனது.

இதையடுத்து இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இந்த 4-ஆவது டெஸ்ட்டுக்கு வருகின்றன. இந்த ஆட்டத்தில் இந்தியா வெல்லும் நிலையில், தொடா் டிராவில் முடிய வாய்ப்பு இருந்தாலும், பாா்டா் – காவஸ்கா் கோப்பை இந்தியாவிடமே இருக்கும். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பந்தயத்திலும் இந்தியா நிலைக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *