கர்நாடகத்தில் சுதந்திர போராட்ட வீரர் சங்கோலி ராயண்ணாவின் வெண்கலச் சிலையைத் திறந்து வைக்கும் விழாவில் முதல்வர் சித்தராமையா பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசியதாவது, “இந்தியா போன்ற சாதி அடிப்படையிலான சமூகத்தில், மகாத்மா காந்தி கூறியது போல், மிகவும் ஓரங்கட்டப்பட்ட நபருக்கும் கூட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நான் இந்தக் கொள்கையை நம்புகிறேன்,
அதற்கேற்ப எனது திட்டங்களை வடிவமைக்கிறேன். சாதாரணமான வெறுக்கத்தக்க அரசியல் மூலமாக நான் ஆட்சிக்கு வரவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆசீர்வாதத்தால்தான் நான் முதல்வரானேன்.
மக்களின் ஆசீர்வாதம் எனக்கு இருக்கும் வரை, யாரும் எனக்கு எதுவும் செய்ய முடியாது. இது பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் போன்றவர்களுக்கு பொறாமையை உருவாக்குகிறது. இந்த பொறாமை அவர்களை அழித்துவிடும்; ஆனால், அவர்களால் என்னை அசைக்க முடியாது. எனக்கு எதிரான எந்தவொரு சதித்திட்டத்திற்கும் நான் பயப்படவில்லை.