பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து | Vijay has no need to criticize BJP: Nainar Nagendran

1376399
Spread the love

சென்னை: ஒரு கவுன்​சிலர், எம்​எல்ஏ கூட தவெக​வில் கிடை​யாது. எனவே, பாஜகவை விமர்​சிக்க வேண்​டிய அவசி​யம் விஜய்க்கு இல்லை என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக பாஜக மத்​திய சென்னை மேற்கு மாவட்​டம் சார்​பில் பிரதமர் மோடி 75-வது பிறந்த நாளை முன்​னிட்டு மருத்​துவ முகாம் சென்னை அமைந்​தகரை​யில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு மாவட்ட பொதுச் செய​லா​ளர் ரமேஷ் தலைமை தாங்​கி​னார். நயி​னார் நாகேந்​திரன் முகாமை தொடங்கி வைத்​தார்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: பிரதமர் மோடி பிறந்​த​நாளை​யொட்டி அக்​.2-ம் தேதி சேவை வார​மாக கடைப்​பிடித்து வரு​கிறோம். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் சர்ச்​சைகள் எது​வும் இல்​லை. கூட்​ட​ணியை பொருத்​தவரை எந்​தக் கட்​சி​யும் கொள்கை அளவில் கூட்​டணி வைப்​பது கிடை​யாது. தேர்​தலுக்​காக மட்​டுமே கூட்​டணி அமைக்​கப்படு​கிறது. தேர்​தலுக்கு இன்​னும் 8 மாதங்​கள் இருக்​கிறது. அதற்​குள் பல்​வேறு மாற்​றங்​கள் ஏற்​படும். திமுக கூட்​டணி அப்​படியே​தான் இருக்​கிறதே தவிர, அவர்​கள் மக்​களுக்கு எந்த நன்​மை​யும் செய்​ய​வில்​லை. அவர்​கள் கொடுத்த வாக்​குறுதி எதை​யும் இது​வரை செய்​தது இல்​லை. அரசின் நிர்​வாகம் சீர்​கெட்​டு உள்ளது.

இவர்​கள் எப்​படி அரசை நடத்​துகிறார்​கள். திமுக கோட்​டையை நாங்​கள் அசைக்​க​வில்​லை. கூட்​ட​ணியை மட்​டும் தான் அசைப்​போம். திமுக இது​வரை​யில் தொடர்ச்​சி​யாக ஆட்​சி​யில் இருந்​தது கிடை​யாது. எனவே, உறு​தி​யாக ஆட்சி மாற்​றம் வரும். எங்​கள் கூட்​டணி வெற்றி பெறும். நான் ஓரிரு நாட்​களுக்கு முன்பு கூட ஓபிஎஸ்​-​யிடம் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசினேன். எனவே, எங்​களுக்​குள் சலசலப்பு ஏதும் இல்​லை.

எங்​கள் கூட்​டணிக்கு கட்சி தலை​வர் பழனி​சாமி. அவர்​கள் கட்​சி​யில் உள்ள பிரச்​சினையை அவர்​கள் பேசி தீர்த்​துக் கொள்​வார்​கள். நாங்​கள் அதி​முக உட்​கட்சி பிரச்​சினை​யில் தலை​யிடு​வ​தில்​லை. எங்​களுக்கு ஆட்சி மாற்​றம் மட்​டுமே இலக்​கு. பாஜக என்​றைக்​குமே அடுத்த கட்சி பிரச்​சினை​யில் தலை​யிடாது.

விஜய் கட்சி தொடங்கி தற்​போது பரப்​புரை செய்​கிறார். அவரது எண்​ண​மும் தமிழகத்​தில் திமுக ஆட்சி அகற்​றப்பட வேண்​டும் என்​பது​தான். தவெகவை பொருத்​தவரை அதில் ஒரு கவுன்​சிலரோ ஒரு எம்​எல்​ஏவோ கிடை​யாது. எங்​களை விமர்​சனம் செய்ய வேண்​டிய அவசி​யம் விஜய்க்கு இல்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் மாநில துணைதலை​வர் சக்​கர​வர்த்​தி, மாநில செய​லா​ளர்​ சும​தி வெங்​கடேசன்​ உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *