காங்கிரஸ் தற்பொழுது கொள்கை தெளிவு இல்லாமல் இருக்கிறதோ என்ற கேள்விதான் எழுகிறது. திமுக , திராவிட கழகம் போன்ற அமைப்பின் கொள்கைகள் நேரடியாக பாஜகவின் கொள்கைக்கு எதிராக உள்ளதால் அவர்களின் அரசியலை சரியாக எதிர்க்க முடிகிறது . ஆனால் காங்கிரஸால் அந்த கொள்கை தெளிவை சரியாக கடத்த முடியவில்லை என்றே தோன்றுகிறது.
பாஜக வலுவாக உள்ள வட மாநிலங்களிலே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி போன்ற மாநில கட்சிகள் வெற்றியைப் பெறுகின்றனர் . ஏனெனில் அவர்கள் அந்த தலைமையின் கீழ் கட்டுப்பட்டு உள்ளனர் . ஆனால் காங்கிரசிலோ அதனைப் பார்க்கவே முடியவில்லை.
வலதுசாரி கொள்கை கொண்டவர்கள் இந்தியாவின் இரண்டு பெரிய கட்சிகளுமே தீவீர இந்துத்துவா Soft இந்துத்துவா கட்சிகளாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் . அதனாலேயே சசி தரூர் போன்ற தலைவர்களை ஆதரித்தும் புகழ்ந்தும் வருகின்றனர் . இது அவர்கள் சுயநலத்திற்காகவே அன்றி நாட்டின் எதிர்காலத்திற்காக அல்ல.

பாஜகவையும் RSS யும் எதிர்க்க தமிழ்நாட்டின் வழிமுறையே சிறந்தது. அதுமட்டுமின்றி,பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசும் அளவிற்கு கூட காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசுவது கிடையாது. பாஜகவை அகற்றி ஆக வேண்டும் என்ற உந்துதலே இல்லாமல் இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட தலைவர்களை வைத்துக்கொண்டு பாஜகவை எப்படி வீழ்த்த முடியும். சசி தரூரின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்று தோன்றலாம் ஆனால் அவரின் வளர்ச்சி காங்கிரஸை இந்துத்துவா மயமாக்குவதாகவும் பின்னோக்கி கூட்டி செல்வதாகவே உள்ளது.
ஆகவே ராகுல் காந்தியும், காங்கிரஸசும் 2029 வெற்றி பெற முக்கிய மாற்றங்களை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
2029 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சரியான முடிவுகளை எடுக்காமல் 2019 – ல் பொருளாதார ரீதியான இட ஒதுக்கிட ஆதரித்தது போல் ஏதாவது முடிவு எடுத்தாலோ இந்துத்துவா அரசியலை தேர்ந்தெடுத்தாலோ அது காங்கிரஸ் கட்சிக்கே ஆபத்தாய் அமையும். வெற்றி தன் வளர்ச்சிக்கு தலையாய் உள்ள தலைகளை!