முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வா.புகழேந்தி “அதிமுக தொண்டர்கள் எந்த காலத்திலும் பாஜக-வுடன் கூட்டணியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதனை நாங்கள் ஆதரிக்க மாட்டோம், எதிர்த்து நிற்போம். “புது கட்சி தொடங்க மாட்டேன், நான் அப்படி சொல்லவில்லை’ என்று கூறியுள்ளது வியப்பாக இருக்கிறது.
இவரை அருகில் வைத்துக் கொண்டு சொன்னவர் வைத்திலிங்கம், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வைத்திலிங்கம் சொன்னதை அப்படியே மறைக்கிறார் ஓபிஎஸ், அதேபோல மூத்த தலைவர் பண்ருட்டியார், ‘தேசிய ஜனநாயக கூட்டணியோடு இனி கூட்டணி இல்லை’ என்று கூறினார்.