பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

dinamani2F2025 08 032F0hd3gpyg2Falkalamba1085600
Spread the love

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்களை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மகளிா் அணித் தலைவரான அல்கா லாம்பா கூறியதாவது: சிறுமி தீவைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்க ஒடிஸா மாநில அரசு தவறிவிட்டது. சிறுமி உயிரிழந்த பின் இந்தக் குற்றத்தில் யாரும் ஈடுபடவில்லை என போலீஸாா் கூறுகின்றனா்.

இதற்கு முன்னா் ஃபகீா் மோகன் கல்லூரியில் பயின்ற மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்துகொண்டாா். சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரீகளை போலீஸாா் கைது செய்தனா்.

குஜராத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் பெண்கள் இரவில் வெளியே வரக் கூடாது என போலீஸாா் விளம்பரப் பதாகைகள் வைத்துள்ளனா்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் இனியும் தொடரக் கூடாது. பாதிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு விரைவு நீதிமன்றங்கள் மூலம் அந்த வழக்குகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *