பாஜக எந்த முகமூடி அணிந்து வந்தாலும் தமிழகம்  ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’தான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி | CM Stalin assures no matter what mask BJP wears, tn is out of control

1378587
Spread the love

சென்னை: ‘எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரை சேர்க்க நினைத்தாலும் தமிழகம் பாஜகவுக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக, பாஜக எம்.பி.க்கள் குழுவினர் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்து விட்டு சென்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தரப்பிர தேசத்தில் கும்பமேளா பலிகளுக் கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பாஜக, கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?. நிச்சயமாக அக்கறை இல்லை. முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச்செயல்.

அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பாஜக, பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக. கரூர் நெரிசல் சம்பவத்தைப் பயன்படுத்தி யாரை தன் கன்ட்ரோலில் வைக்கலாம் என்று வலம்வருகிறார்கள். எந்த முகமூடி அணிந்து வந்தாலும் எத்தனை அடிமைகளை சேர்த்து வந்தாலும், புதிதாக யாரை சேர்க்க நினைத்தாலும் நான் முன்பே சொன்னதுபோல், தமிழகம் உங்களுக்கு ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ தான். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *