பாஜக, காங்கிரஸிற்கு நிதி வழங்கிய பெருநிறுவனங்கள்; எப்படி கொடுத்துள்ளார்கள்?|Bonds Gone, Money Flows On: BJP Takes 82% of Trust Funds

Spread the love

தேர்தல் பத்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்று கடந்த ஆண்டு அந்தப் பத்திரங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

இதனால், பெரு நிறுவனங்கள் தற்போது அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral Trust) மூலம் பணம் வழங்கி வருகின்றன.

தேர்தல் அறக்கட்டளை என்பது நிறுவனங்கள் இணைந்து அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க தொடங்கும் அறக்கட்டளை ஆகும். “அறக்கட்டளை’ என்று பெயரிலேயே இருக்கிறது… அதன் படி, இந்த அறக்கட்டளைகள் மூலம் கொடுத்த நிதிக்கு அரசியல் கட்சிகள் சட்டப்படி எந்தக் கைமாறும் செய்யமுடியாது.

2024-25 நிதியாண்டில், 9 தேர்தல் அறக்கட்டளைகள் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,811 கோடி நிதி வழங்கியிருக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட, 200 சதவிகிதம் உயர்வாகும். கடந்த நிதியாண்டில், அரசியல் கட்சிகளுக்கு பெருநிறுவனங்கள் ரூ.1,218 கோடி தான் வழங்கி இருக்கின்றன.

யாருக்கு… எவ்வளவு?

இதில் பாஜகவிற்கு மட்டுமே ரூ.3,112 கோடி கிடைத்திருக்கிறது. இது மொத்த தொகையில் 82 சதவிகிதம் ஆகும்.

காங்கிரஸ் ரூ.299 கோடி பெற்றிருக்கிறது. இது 8 சதவிகிதம். பிற கட்சிகள் ரூ.400 கோடி நிதி பெற்றிருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 10 சதவிகிதம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *