தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பாஜக – அதிமுக கூட்டணியை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.
அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைய வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.