பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் MK Stalin criticized AIADMK-BJP alliance is a conspiracy

Spread the love

அதிமுக – பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுபற்றி முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில்,

“திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது,

‘அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம் அ.தி.மு.க. – பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல; தமிழ்நாட்டை – தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்’ என்று தெளிவாக எடுத்துச் சொல்லி ‘ஓரணியில் தமிழ்நாடு’ என இணைகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைத்துள்ள ‘வார் ரூம்’ – ஐத் திறந்து வைத்தேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *