பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம்: செல்வப்பெருந்தகை சந்தேகம் | BJP may indulge in fraud: selvaperunthagai

Spread the love

தமி​ழ​கத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணி​யில் பாஜக தில்​லு​முல்​லுகளில் ஈடுபட வாய்ப்​புள்​ளது என்று தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தம் என்ற போர்​வை​யில் குடி​யுரிமைச் சட்​டம் -1955ன்​கீழ் மத்​திய அரசுக்கு ஒதுக்​கப்​பட்ட அதி​காரங்​களை தேர்​தல் ஆணை​யம் கையகப்​படுத்​தி​யுள்​ளது. உள்​ளுர் தேர்​தல் ஆணைய அதி​காரி​களுக்கு குடி​யுரிமை குறித்து முடிவு செய்ய அதி​காரம் அளிப்​ப​தன் மூலம் மக்​களின் குடி​யுரிமைக்கு பேராபத்து ஏற்​பட்​டுள்​ளது. மாநில அரசுகளு​டன் கலந்து பேசாமல் தேர்​தல் ஆணை​யம் இத்​தகைய நடை​முறை​களை தன்​னிச்​சை​யாக திணிப்​பது கூட்​டாட்சி தத்​து​வத்தை சிதைக்​கும் செய​லாகும்.

தமி​ழ​கத்​தில் தேர்​தல் ஆணை​யம் மேற்​கொண்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்​தப் பணி​யில் ஈடு​பட்​டிருப்​பவர்​கள் தமிழக அரசு ஊழியர்​களாக இருந்​தா​லும் அவர்​கள் தேர்​தல் ஆணை​யத்​துக்கு கட்​டுப்​பட்​ட​வர்​கள் தான். எனவே, சிறப்பு தீவிர திருத்​தத்​தின் மூல​மாக மற்ற மாநிலங்​களில் எத்​தகைய வாக்​குத் திருட்டை கையாண்டு பாஜக குறுக்கு வழி​யில் ஆட்​சிக்கு வந்​ததோ, அதே அணுகு​முறையை தமி​ழ​கத்​தி​லும் பின்​பற்ற தேர்​தல் ஆணை​யத்​தோடு கூட்​டணி வைத்து பாஜக பல்​வேறு தில்​லு​முல்​லுகளில் ஈடு​படு​வதற்கு வாய்ப்பு இருக்​கிறது.

இதனை எதிர்த்து உச்​ச நீ​தி​மன்​றத்​தில் திமுகவோடு இணைந்து காங்​கிரஸ் கட்சி வழக்கு தொடுத்​துள்​ளது. சிறப்பு தீவிர திருத்த முயற்​சிகளை கண்​டித்து இன்று திமுக தலை​மையி​லான காங்​கிரஸ் உள்​ளிட்ட இந்​தியா கூட்​டணி கட்​சிகள் தமி​ழ​கம் முழு​வதும் நடத்​தும் கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யினர் அனை​வ​ரும் பெருந்​திரளாக பங்​கேற்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *