கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “100 நாள் வேலை திட்டத்தை அழிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. பாஜக அரசியலில் தரம் தாழ்ந்துவிட்டது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே
காந்தியடிகளை சிறுமைப்படுத்துவதில் குறியாக இருக்கிறார்கள். நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கொண்டாடுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்துக்கு “ஜி ராம் ஜி’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
‘ஹே ராம்’ என்று சொன்ன காந்தியின் பெயரை நீக்கியுள்ளனர்.
காந்தி மீது வெறுப்பை உமிழ்கிறார்கள்.
100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை பாஜக படிப்படியாக குறைத்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தில் ஒருநாள்கூட வேலை கிடைப்பதில்லை. தற்போது 125 நாள்கள் வேலையை உயர்த்தியுள்ளதாக ஏமாற்றுகின்றனர்.
