பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

Dinamani2f2024 10 242fmlzjtrf32f1c32c4fc21aeabf642961b517eae4f5f.jpg
Spread the love

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்தற்காக பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

வயநாடு தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கலின்போது, காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறைக்கு வெளியே இருக்கும் புகைப்படத்தினை சுட்டிக்காட்டிய பாஜகவினர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கார்கேவை பிரியங்கா, ராகுல், சோனியா காந்தி மூவரும் வெளியில் நிற்க விட்டதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவை பாஜகவினர் அவமதித்த பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறியதாவது, “பாஜகவினர் கூறுவது முழுக்க முழுக்க பொய்கள் நிறைந்தவை. வேட்புமனு தாக்கல் நேரத்திற்கு முன்னதாகவே செல்லுமாறு, பிரியங்கா காந்தி அறிவுறுத்தப்பட்டிருந்தார்; அதனால்தான், முன்னதாகவே பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்யும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறைக்குள் இருந்தார். இதனைத் தொடர்ந்து நான் உள்பட சோனியா, ராகுல் மூவரும் வேட்புமனு தாக்கல் அறைக்கு சென்றபோதே அறையின் கதவுகள் மூடப்பட்டிருந்தன.

அறைக்கதவுகள் திறக்கும் வரையில் நாங்களும் வெளியில்தான் காத்திருந்தோம். அதுபோலவே, எங்களுக்கு அடுத்து வந்த மல்லிகார்ஜூன கார்கேவும் காத்திருக்க வேண்டியிருந்தது. பொய்களைப் பரப்புவதன் மூலம், கார்கேவை பாஜக அடிக்கடி அவமதித்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *