பாஜக வலையில் விழும் தவெக விஜய்: பெ.சண்முகம் எச்சரிக்கை |” Vijay of TVK is falling into the BJP’s trap” -CPIM party Shanmugam warns.

Spread the love

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார்.

செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததை அடுத்து, விஜய் வரும் டிசம்பர் 18-ம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்தித்து தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தமிழ்நாட்டில் நடத்தும் முதல் மக்கள் சந்திப்பு இது.

இதற்கிடையில் SIR, திருப்பரங்குன்ற விவகாரம் என பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துவிட்டன. திமுகவை அரசியல் எதிரி என தொடர்ந்து விமர்சிக்கும் விஜய், பாஜக பற்றி ஏதும் பேசாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளது.

தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய்

இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக எனக் கூறிய விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு எந்த இடத்திலும் கொள்கை எதிரியைப் பற்றி குறிப்பிடவில்லை.

கரூருக்கு முன், கரூருக்கு பின் என கொள்கை எதிரி யார் என்பதில் விஜயின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்று விஜய்யை விமர்சித்து பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *